உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சர்க்கார் புரட்சி பாடல் : வரவேற்பு எப்படி.?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற உள்ள நிலையில், சிம்ட்டாங்காரன் என்கிற பாடல் கடந்தவாரம் வெளியானது. என்ன வார்த்தை என்றே புரியாத இப்பாடலுக்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் அதிக பார்வைகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் நேற்று இப்படத்திலிருந்து, ஒரு விரல் புரட்சி என்ற மற்றொரு பாடல் வெளியாகி உள்ளது. ரஹ்மான் பாடியிருக்கிறார். ஒரு விரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே... என்ற ஆரம்பிக்கும் இப்பாடல், மக்கள் தங்களது உரிமைக்காக கேள்வி எழுப்பும் வகையில் அரசியல் வசனத்துடன் இந்த பாடல் வெளியாகியிருக்கிறது.

இப்பாடல் வெளியான 20 மணிநேரத்தில் 32 லட்சம் பார்வைகளும், 4 லட்சம் லைக்குகளும், 23 ஆயிரம் டிஸ்லைக்குகளும் கிடைத்துள்ளன.