உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கோண்டாவிலில் பொலிஸ், அதிரடிப்படை கெடுபிடிக்குள்ளும் வாள்வெட்டுக் குழு புகுந்து விளையாடியது.

யாழ் கோண்டாவிலில் பலசரக்கு கடை ஒன்றின் மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு தப்பியுள்ளது.

கோண்டாவில் ஸ்டேசன் வீதியில் அமைந்துள்ள ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பித்தது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.45மணியளவில் நடைபெற்றது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாதவர்களே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பித்தனர் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, விசாரணைகளை மேற்கொண்டார்.

அத்துடன் அந்தப் பகுதியில் சிறப்பு அதிரடிபடையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று காலை பெரும் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாலை கோப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்வெட்டுக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.