தங்க நகைகளை ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்தியவர் பிடிபட்டார்

தனது உடல் மற்றும் ஆடைக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து 1 கிலோ 200 கிரேம் தங்க நகைகளை கடத்த முயன்ற ஒருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருடாக இலங்கைக்கு பிரவேசிக்கவிருந்த நிலையிலேயே சுங்கப் பிரிவு அதிகாரிகள் இவரை கைதுசெய்துள்ளனர்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 65 தங்க மாலைகள் மற்றும் 6 வளையல்கள் உட்பட பெருமளவிலான நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி சுமார் 65 இலட்சம் ரூபாவாகும் எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
close