கோப்பாய்- கைதடி பாலத்திற்கு அருகில் சற்று முன்னர் கோர விபத்து…

யாழ் கோப்பாய்- கைதடிப் பாலத்திற்கு அருகாமையில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கோப்பாய் -கைதடி வீதி ஊடாக பயணித்த டிப்பர் வாகனம் எதிர்த் திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று முன் பக்கமாக சென்று கொண்டிருந்த உந்துருளி ஒன்றுடன் மோதி, எதிர்த் திசையில் வந்த டிப்பருடன் பலமாக மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் டிப்பர் சாரதி உட்பட இருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் வீதி விபத்து சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
close