உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் ஆவா குழுவின் அட்டகாசம்! இராணுவத்திற்கு அதிகாரத்தை தர மறுக்கும் அரசாங்கம்

வடக்கில் செயற்படும் ஆவா குழுவினை கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஆவா போன்ற சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்வார்கள் எனவும், வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு அமைச்சு இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரம் வழங்கினால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயார் என இராணுவதளபதி கோரிக்கை விடுத்து வந்துள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள சில இளைஞர் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தின் உதவியை பெற்றால் அது சர்வதேச சமூகத்திற்கு பிழையான செய்தியை தெரிவிப்பதாக அமையும்.

இந்நிலையில், போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தவும் படையினரை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஆராயவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக, இராணுவத்திற்குஅதிக அதிகாரங்களை வழங்கினால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயார் என இராணும் அறிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில், ஆவா குழுவை முற்றாக ஒழிக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கண்காணிப்பின் கீழ் விஷேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.