உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மாணவியின் பிறந்தநாளுக்கு காதலன் கொடுத்த பரிசு. போலீசார் வலைவீசி தேடுதல்.

பிறந்த நாளில் பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த மாணவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

காதல் தொடர்பில் இருந்த மாணவியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தம்பல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

15 வயதான மாணவியின் பிறந்த நாள் அன்று, அவரை கதிர்காமத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்ற மாணவன் அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி பிறந்த நாள் அன்று பாடசாலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றுள்ளார். எனினும் அவர் பாடசாலைக்கு செல்லாமல் காதலனுடன் கதிர்காமத்திற்கு சென்றுள்ளார்.

காதலியை குறித்த மாணவன் கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பில் மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து தாய் தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞனை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.