கோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்!!

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் 10 பேர், வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த பிரிவுக்குப் பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகரை நாம் தொடர்புகொண்டு கேட்ட போது குறித்த கல்லுாரியில் டெங்கு பரவக்கூடிய சூழல் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதே வேளை கோப்பாய் கல்வியற்கல்லுாரியில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் தரங் குறைந்த உணவு வகைகளே காணப்படுவதாகவும் அத்துடன் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு கல்வியற்கல்லுாரியால் வழங்கப்படும் உணவுவகைகளும் தரங்குறைந்த உணவு வகைகளாக உள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோப்பாய் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பணத்தினை மீதப்படுத்தி அரசசாங்கத்திற்கு மீள வழங்கி நல்லபெயர் எடுப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
close