உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மாட்டுடன் மோதி இளைஞன் பரிதாப மரணம்.

வீதியில் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து பொத்துவில் குஞ்சானோடைப் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மாட்டுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பொத்துவில் ஊறணிப் பகுதியைச் சேர்ந்த T,ஜினியன் எனும் 19 வயது இளைஞனே விபத்தில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.