உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் ஆசிரியரின் வீட்டுக்குள் வாள் முனையில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்துக்குப் பின்பாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் இன்று அதிகாலை வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு சுமார் பத்து பேருக்கும் அதிகமானவர் மதில் பாய்ந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். யன்னல்களால் வாள்களை காட்டி கதவை திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட கதவினை உடைத்துக்கொண்டு உள்நுழைந்துள்ளனர்.

அவர்களிடமிருந்த தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை வீட்டினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கொள்ளையர்கள், கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து தப்பிசென்றுள்ளனர்.

கொள்ளை இடம்பெற்ற வீட்டு உரிமையாளரால் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்