உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வானில் கஞ்சா. வவுனியாவில் இளைஞர்கள் கைது

வவுனியாவில் இன்று காவல்துறையின் தேடுதல் நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றில் கேரள கஞ்சாவினை எடுத்துச் சென்ற 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் வன்னிப்பிராந்திய பிரதிப் காவல்துறை மா அதிபரின் கீழ் செயற்படும் போதை பொருள் ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வன்னிப்பிராந்திய பிரதிப் காவல்துறை மா அதிபர் அனுரா அபேவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் போதை பொருள் ஒழிப்புப்பிரிவினர் இன்று அதிகாலை ஓமந்தை சந்தி பகுதியில் கிளிநொச்சியிலிருந்து கிண்ணியா, திருகோணமலைக்குச் சென்ற டொல்பின் ரக வாகனம் ஒன்றினை மறித்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.