சிறைச்சாலை வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய வான்! ஆணும் பெண்ணும் பரிதாபமாக பலி
சிறைச்சாலை பேருந்தும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மஹாவ பொலிஸ் பிரிவில் பலகொல்லாகம பிரதேசத்தில் இன்று காலை அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் பெண்ணொருவரும் ஆணொருவருமே உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரத்தில் இருந்து வாரியபோல நோக்கி பயணம் செய்த சிறைச்சாலை பேருந்துடன் எதிராக வந்த வேன் கடுமையாக மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.
வேனில் பயணித்த இருவரே அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.