உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கால் ஏட்பட்ட விபரீதம். மாணவியை தாக்கிய மாணவன்.

கம்பளையில் பேஸ்புக் பாவனையால் ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்து வன்முறையாக மாறியுள்ளது.

இதன் காரணமாக மாணவர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட மாணவன் மற்றும் மாணவி கம்பஹா நகரத்தில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டில் கல்வி கற்று வருகின்றனர்.

மாணவியின் தாயார் பேஸ்புக் பயன்படுத்தும் ஒருவராகும். தாயின் புகைப்படத்தை எடுத்த மாணவன் அம்மாவையா மகளையா திருமணம் செய்வதென வினவியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவி, அப்படி கேட்டு என்னை அசிங்கப்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். இதன்போது மாணவன், மாணவியை தாக்கியுள்ளார்.

இதனால் அன்றைய தினம் இரவே மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பில் கம்பளை வைத்தியசாலையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.