உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

உயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த மருத்துவர்கள்!!

கான்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், உயிருடன் இருக்கும் ஒருவரை, மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, கான்பூரில் உள்ள பெட்ஹேபூரில், பூஹ்ல் சிங் (55) என்பவருக்கு சாலை விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை, கான்பூரில் உள்ள ராம சிவ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அன்று மாலை 4 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிணவறைக்குக் கொண்டு சென்றனர். அந்த சமயத்தில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட பூஹ்ல் சிங், மூச்சு விடுவதைப் பார்த்து, அவரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் மீண்டும் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சில மணி நேரம் கழித்து அவர் சிகிச்சைப் பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார்.