உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

நாயிடம் மன்னிப்பு கேட்க மறுத்ததால் கொலை..

டெல்லியில் நாயால் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த விஜேந்தர் ரானா என்பவர் நள்ளிரவில் தனது மினி டிரக் வாகனத்தை வீட்டருகே உள்ள இடத்தில் நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கு உறங்கிக்கொண்டிருந்த நாய் மீது மினி டிரக் லேசாக உரசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாய் குரைத்ததை கண்ட நாயின் உரிமையாளர் விஜேந்தரிடம் தகராறு ஈடுப்பட்டுள்ளார். மினி டிரக்கை உரசியதற்காக நாயிடம் மன்னிப்புக் கேட்க நாயின் உரிமையாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு விஜேந்தர் மறுத்ததால் இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர், கத்தியால் விஜேந்தரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலையே விஜேந்தர் உயிரிழந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு வந்த விஜேந்தரின் சகோதரரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த விஜேந்தர் சகோதரருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.