உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மணமகன் தப்பியோட்டம்! மாமனாரை திருமணம் செய்த மணமகள்!!

பீகாரில் மணமகன் காதலியுடன் தப்பிச் சென்றதால், மாமனாரை மருமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சமஷ்டிபூரைச் சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவருடைய மகனுக்கும் சுவப்னா (21) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண விழாவுக்காக உற்றார் உறவினர் அனைவரும் வெளியூரிலிருந்து மண்டபத்துக்கு வந்திருந்தனர்.

அப்போது திருமணத்தன்று காலையில், மணமகன் காணாமல் போயிருந்தார். பின்னர் விசாரிக்கையில், காதலியுடன் மணமகன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. உடனே திருமண விழா ரத்து செய்ய மணமகனின் பெற்றோர் முயற்சித்தனர். ஆனால், ஏற்பாடு செய்த திருமணம் நின்று விடக்கூடாது என்று கெளரவம் பார்த்த மணபெண்ணின் வீட்டார், மணமகனின் தந்தையை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

வேறுவழியில்லாமல், மணப்பெண்ணும் மாமனார் என்று கூட பாராமல் கழுத்தை நீட்டினார். பின்னர், மணமகன் சார்பில் மாமனாரே மணப்பெண்ணை தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.