உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்திய ஹொட்டல் உரிமையாளா்.

பெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்திச் சென்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய ஹொட்டல் உரிமையாளர் மற்றும் அதன் ஊழியர் ஒருவருக்கும் கேகாலை மேல் நீதிமன்றம் இன்று 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடந்த 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் கேகாலை தெமலந்த வளவ்வ என்ற ஹொட்டலுக்கு அழைத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, அந்த தண்டனை 7 ஆண்டுகளில் கழித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டதுடன் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய மேலும் ஹொட்டல் ஊழியர்கள் 5 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.