உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க முச்சக்கர வண்டியில் வந்தோரால் இளம் யுவதி கடத்தல். யாழில் பதற்றம்.

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் பட்டப்பகலில் முச்சக்கரவண்டியில் யுவதி ஒருவர் இன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

யுவதியைக் கடத்திச் சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்தி யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாகத் தப்பிச் சென்றுள்ளனர்.இதன்போது ஒருவர் கடத்தல்காரர்களை துரத்திச் சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கழட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.