உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

புகையிரதத்தில் மோதி மூன்று உயிர்கள் பலி.

வெலிகந்தை புனானைப் பிரதேசத்தில் புகையிரதம் மோதி 03 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 10.20 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு- இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ‘மீனகயா’ கடுகதி புகையிரதம் புனானை புகையிரத நிலையத்தை அடைவதற்கு இரண்டு கிலோ மீற்றர் தூரம் இருக்கும் ​போது அசேலபுர என்ற இடத்தில் யானைக் கூட்டம் ஒன்றின் மீது மோதியுள்ளது.

இதன்போது மூன்று காட்டு யானைகள் புகையிரதத்தில் மோதுன்டு உயிரிழந்துள்ளன. அதே நேரம் புகைவண்டி தடம் புரண்டதால் மக்களின் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விபத்து இடம் பெற்ற இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டு மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வரையில் பொதுமக்களை பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து அழைத்துச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.*www.jaffnabbc.com*