உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மயானத்திற்கு அருகால் சென்றவரை அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

பொலன்னறுவை மாவட்டம் சோமாவத்திய - ஈரியாவல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான நபர் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.

மயானத்திற்கு அருகாமையில் நடந்து சென்ற நிலையிலேயே குறித்த நபர் கறுத்த யானை ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் பலியானவர் 40 வயதுடைய குடும்பஸ்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுப் பாதையை அண்டிய வீதியால் பதினைந்து கிலோமீட்டர்கள் தூரம் நடந்து சென்று பயணிக்கவேண்டியிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்படுள்ளது.

சோமவத்திய மயானத்தின் அருகாமையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த விசாரணைகளை புலஸ்திஸ்ஸபுர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் காட்டு யானைகளின் தாக்குதலால் பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.