உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஊமை போல் நடித்து நகைக்கடையில் கொள்ளை!

ஊத்துக்கோட்டையில் ஊமை போல் நடித்து நகைக்கடையில் 38 ஆயிரம் ரூபாய் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சத்தியவேடு ரோட்டைச் சேர்ந்த சகோதரர்கள் சந்திரன், ராஜேந்திரன். இவர்கள் இருவரும் அதே பகுதியில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை அவர்களது கடைக்கு ஊமை அடையாள அட்டையுடன் வந்த ஒருவர், பண உதவி செய்யுமாறு வேண்டினார். அப்போது கடையில் இருந்த ராஜேந்திரன் பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு அடமான பணம் 38 ரூபாய் எடுத்து மேஜையில் வைத்திருந்தார். இதை பார்த்த ஊமையாளர், சாதூர்யமாக அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடையை விட்டு நகர்ந்து சென்றார்.

சிறிது நேரத்துக்குப் பின் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், ஊமை போல் வந்தவர் பணத்தை எடுத்துச் சென்றதை உணர்ந்தார். இதையடுத்து பணம் கொள்ளை போன சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.