உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

தேசத்தையே கலங்க வைத்த சிறுவனின் அபலச் சாவு!!😥

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.

வவுனியா, பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தேவகுமார் அனோசன் என்ற 14 வயது தமிழ் சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வைரவ மூன்று முறிப்பு குளத்திற்கு சென்ற போது தவறுதலாக நீரில் விழுந்த நிலையில் கூக்குரலிட்டுள்ளார்.

கூக்குரலை கேட்டு மக்கள் அந்த இடத்திற்கு விரைந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்த போதும் பலனில்லை என தெரியவருகிறது.

இதன் பின்னர் குளத்திலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.