உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மாமியாரையும் விட்டுவைக்காத மருமகன்.

திருகோணமலை – கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கஜுவத்தை பகுதியில் மாமியாரை தாக்கிய மருமகனை இன்று காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.எம்.ரணசிங்க (37வயது) என்பவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது.


மதுபோதையில் வருகை தந்திருந்த எஸ்.எம்.ரணசிங்க தனது மனைவியான நிஷன்சலாவை (34 வயது) பொல்லால் தாக்கியுள்ளார்.


இதன்போது குறித்த பெண்ணின் தாயர் தடுப்பதற்காக சென்றபோதே சந்தேகநபர் அவரை பொல்லால் தாக்கியதாக தெரியவருகிறது. இந்த நிலையில் காயமடைந்த சந்தேகநபரின் மாமியார் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவருக்கு வலது கால் உடைந்துள்ளதுடன், இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்து சேவைப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 


 இதேவேளை அந்த நபரின் மனைவி அருகிலுள்ள கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 மேலும் சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது