Trending News...

பெற்ற குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த தந்தை!

சாத்தூர் அருகே பெற்ற குழந்தையை கொடூரமான முறையில் தந்தையே கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியைச் சேர்ந்த திவாகரன், அதே ஊரைச் சேர்ந்த சுபாஷினி என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனால் திருமணம் செய்யுமாறு சுபாஷினி வற்புறுத்தியும் திவாகரன் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து சுபாஷினி அளித்த புகாரின் பேரில் அவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ஓராண்டு கழித்து சிறையிலிருந்து வந்த திவாகரன், குழந்தையுடன் இருந்த சுபாஷினியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அக்குழந்தை தமக்கு பிறந்தது அல்ல எனக்கூறி சுபாஷினியிடம், திவாகரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே ஆத்திரமடைந்த அவர், ஒன்றரை வயது குழந்தையை கழுத்தை நெறித்தும், கண் மற்றும் மூக்கில் மிளகாய் பொடி தூவியும் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து திவாகரனை தேடி வருகின்றனர்.