உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இரு மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்த கிழட்டு அதிபர்

மாணவிகள் இருவரை கடுமையாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை – தெபுவன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

14 வயதான இரண்டு மாணவியரே இவ்வாறு கடுயைமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் இந்த மாணவியர், மருத்துவ பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்கு வழங்கப்படும் பகல் உணவின் ஒரு பகுதியை காரியாலயத்திற்கு தருவித்துக் கொண்டு இந்த இரண்டு மாணவியரையும் காரியாலயத்திற்கு அதிபர் அழைத்துள்ளார்.

உணவு வழங்கும் போர்வையில் முதலில் மாணவியர் இருவரையும் தனது தலையில் உள்ள நரை மயிர்களை பிடுங்கச் செய்துள்ளார்.

அதன் பின்னர் இரண்டு மாணவியரையும் கடுமையாக பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.