உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வியா வியா ஓவியா... நீ கிளியோபாட்ரா ஆவியா.. நீ மனச திறக்கும் சாவியா...!

கணேசா மீண்டும் சந்திப்போம் என்ற படத்தில் இடம்பெற்ற ஓவியா புகழ் பாடும் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. தற்போது இரண்டாம் சீசனே முடிந்துவிட்டபோதும், தற்போதும் பிக் பாஸ் என்றால் பலரது நினைவிற்கு டக்கென நினைவிற்கு வருபவர் ஓவியா தான்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறியபின், அவர் நடித்த படங்கள் எதுவும் இன்னமும் ரிலீசாகவில்லை.

ஓவியாவை விட்டா யாரு:
களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமான ஓவியா, பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன் சீனி என்ர படத்தில் நடித்திருந்தார். பின்னர் அப்படத்தின் பெயரை ஓவியாவை விட்டா யாரு என படக்குழுவினர் மாற்றி விட்டனர்.

கணேசா மீண்டும் சந்திப்போம்:
இந்நிலையில் தற்போது அவர், பிருத்வி பாண்டியராஜனுடன் கணேசா மீண்டும் சந்திப்போம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹரிகீதா பிக்சர்ஸ் சார்பில் அருண் விக்ரம கிருஷ்ணன் இப்படத்தைத் தயாரிக்கிறார். ரத்தீஷ் எரட்டே என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.

வியா வியா ஓவியா:
விபின் கே.ராஜ், சிபி இசை அமைக்கும் இப்படத்தின் புரொமோசனுக்காக ஓவியா புகழ் பாடும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். "வியா வியா ஓவியா... நீ கிளியோபாட்ரா ஆவியா.. நீ மனச திறக்கும் சாவியா..." என இப்படியாக அப்பாடம் தொடங்குகிறது.

வைரல்:
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் ஓவியா பேசிய பல வசனங்கள் வைரலானது. ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க' என்ற வசனம் பாடலாகவும் மாறியது. இந்நிலையில், ஓவியாவைப் பற்றிய இப்பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.