உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

புகையிரதத்துடன் மோதிய பாரவூர்தியால் இருவர் படுகாயம்

ஹிக்கடுவை – வெவல தொடரூந்து கடவையில் தொடரூந்துடன் பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 3.35 மணியளவில் மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்திலேயே பாரவூர்தி மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தொடரூந்தின் முன்னால் பாரவூர்தி மோதியுள்ள நிலையில், தொடரூந்துடன் 800 மீற்றவர் வரை அது இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் இதற்கு முன்னரும் மோட்டார் வாகனம் ஒன்று தொடரூந்துடன் மோதியதில் ஒருவர் பலியானதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது பாதுகாப்பற்ற தொடரூந்து கடவை என்பதால் அங்கு தன்னியக்க பாகாப்பு கடவையை அமைத்து தருமாறு பொது மக்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, இந்த விபத்து காரணமாக கரையோர தொடரூந்து சேவைகள் காலதாமதமாகியுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.