உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

அப்பாவின் ஆவியை வெளியேற்ற தாயை கொலை செய்த மகன்.

மும்பையில் மாடலாக பணியாற்றி வருபவர் லக்சயா சிங் (வயது 23).  இவரது தாய் சுனிதா சிங் (வயது 49).  பேஷன் டிசைனராக இருந்து வருகிறார்.  இவர்கள் இருவரும் அந்தேரியில் (மேற்கு) லோகந்த்வாலா பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர்.

லக்சயாவுடன் அவரது தோழி ஆஷ்பிரியா பானர்ஜி பல வருடங்களாக ஒன்றாக வசித்து வருகிறார்.  லக்சயா மற்றும் அவரது தாய்க்கு போதைபொருள் பயன்படுத்தும் பழக்கம் உண்டு என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 4ந்தேதி லக்சயா வீட்டுக்கு வந்துள்ளார்.  அவருடன் லக்சயாவின் நண்பர் நிகில் ராய், தோழி ஆஷ்பிரியாவும் வந்துள்ளனர்.  இதில், தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி லக்சயா அவரை அடித்து, உதைத்து குளியலறையில் தள்ளி கதவை மூடி விட்டு வெளியே சென்றுள்ளார்.  அவர் திரும்பி வந்தபொழுது சுனிதா சிங் இறந்து கிடந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் லக்சயாவை கைது செய்துள்ளனர்.  அவர் போலீசாரிடம், திட்டமிட்டு கொலை செய்யவில்லை.  அவரிடம் இருந்த அப்பாவின் ஆவியை வெளியே கொண்டு வர முயற்சி செய்தேன் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட லக்சயாவுக்கு அக்டோபர் 8ந்தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.