உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞர்!

பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இளைஞர் அதனை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். 20 வயதான இந்த இளைஞர் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றி திரிந்து வந்துள்ளனர். கடந்த ஏப்ரல், 14ம் தேதி விடுமுறை நாளான அன்று மாணவியை பள்ளிக்கு வரவழைத்த சதீஷ், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அவருக்கு கொடுத்துள்ளார்.

என்னவென்று தெரியாமல் குடித்த மாணவி மயக்கமடைந்துள்ளார். இதனை பயன்படுத்திய சதீஷ் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதை, மாணவிக்கு தெரியாமல், தன் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்நிலையில், அந்த வீடியோவை சமீபத்தில் தன் நண்பர்களுக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பி உள்ளார்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் மளமளவென பரவியது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்து மாணவியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர், ஜெயந்தி ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, மகளிர் காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர். 14 வயது பள்ளி மாணவிளை 20 வயது இளைஞர் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.