உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவாளை மேற்பிரிவு தோட்ட கொழுந்து மடுவத்தில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழுந்து மடுவத்தில் சடலமொன்று கிடப்பதாக பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நேற்று (16) செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரையிலும் யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு மரண விசாரணை நடத்தப்பட்ட பின்னர், சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக, நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்படும் என ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.