உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

செய்தி வாசித்துக்கொண்டே மேலே போகும் பெண்: வைரல் வீடியோ!

முன்பெல்லாம் அரைமணிநேர செய்தி சேனல்கள் ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டிருந்தன. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் 24 மணி நேரமும் செய்தி சேனல்கள் நேரலையில் செய்திகள் கொடுக்கத் தொடங்கியதால், அவற்றிற்கு செய்திகளையும் தாண்டிய கவன ஈர்ப்பு உத்திகள் தேவைப்படத் தொடங்கின.

விதவிதமான இசைகளுடன் கூடிய விரைவுச் செய்திகள், செய்திகள் வாசிப்பவர்களின் புதுமையான பேச்சுமுறை, கவன ஈர்ப்பு செய்யும் ஆடை வடிவமைப்புகள் என பலவும் இவற்றில் அடங்கும்.இப்படித்தான் நைஜீரியாவில் உள்ள இரு பிரபல செய்தி சேனல் செய்தி வாசிக்கும்போது செய்த புதுமையான எடிட்டிங் உத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்தி வாசிப்பாளராக இருக்கும் அந்த பெண் செய்தி வாசித்துக்கொண்டே மேலே செல்கிறார். அவருக்கு பின்னால் ஒளிர்ந்துகொண்டிருக்கும் திரை பெரிதாகிறது. இவ்வாறு செய்தி வாசிப்பாளர் செய்தி வாசித்துக்கொண்டே மேலே போவது புதுமையாக இருந்தாலும் பலரின் நகைப்புக்கும் உரியதாக இணையத்தில் மாறியுள்ளது.