உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கடன் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா. வங்கி அதிகாரியை நடுரோட்டில் புரட்டியெடுத்த பெண்

வங்கியில் கடன் கேட்ட பெண்ணிடம் பாலியல் ரீதியாகச் சலுகைகளை கேட்ட வங்கி மேலாளரை அந்த பெண் சாலையில் இழுத்துவந்து உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம், தவன்கரே நகரில் டிஹெச்எப்எல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சென்று அந்த வங்கியின் பெண் வாடிக்கையாளர் கடன் கேட்டுள்ளார்.

அதற்குக் கடன் கொடுக்க முதலில் மறுத்த அந்த வங்கியின் மேலாளர் பின்னர் அந்தப் பெண்ணிடம் கடன் வேண்டுமென்றால், தன்னுடன் பாலியல் ரீதியான உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வங்கியின் மேலாளருக்குப் பாடம் புகட்ட எண்ணிய அந்தப் பெண் வாடிக்கையாளர், தவன்கரே நகரில் உள்ள நிஜலிங்காப்பா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வங்கி மேலாளரை வரச் செய்துள்ளார்.

வீட்டுக்கு வந்த மேலாளரை அந்தப் பெண் வாடிக்கையாளர் அனைவரின் முன் வெளியே இழுத்துவந்து உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்தார்.

மேலாளரை அந்தப் பெண் வெளியே இழுத்து வரும் போது, தான் தற்கொலைசெய்து கொள்வேன் என்று மேலாளர் மிரட்டியுள்ளார். ஆனால், துணிச்சலாகச் சாலைக்கு இழுத்துவந்த அந்தப் பெண், மேலாளரை உருட்டுக்கட்டையால் வெளுத்து வாங்கி, போலீஸுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அடி விழுந்தபோது, மேலாளர் ஒருவார்த்தைகூட பேசவில்லை.

அங்கு வந்த போலீஸார், வங்கியின் மேலாளரை அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் அளித்த புகாரின்கீழ் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.