உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

அர்ஜுன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். முன்னணி நடிகை பரபரப்பு புகார்.

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்றாலே அர்ஜுன் தான். இவர் படங்களை ரசிக்காதவர்கள் இங்கு யாருமே இல்லை.

முதல்வன், ஜெண்டிமேன், மருதமலை ஏன் மங்காத்தா வரைக்குமே பலருக்கும் இவரை பிடிக்கும்.

இந்நிலையில் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது என்னை கட்டிப்பிடிப்பது போல் ஒரு காட்சி இருந்தது.

அப்போது அவர் என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்தார், அது பேட் டச் என்று எனக்கு அங்கேயே தெரிந்தது.

ஆனால், அப்போது எங்களை சுற்றி 50 பேர் இருந்தார்கள், என்னால் அங்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை, மேலும், படப்பிடிப்பு முடிந்தும் என்னை பல முறை அவர் தனியாக பார்க்கும் படி அழைத்தார், ஆனால், அப்போது என்னால் இதை வெளியே தைரியமாக சொல்ல முடியவில்லை என்று கூறி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.