திருமணத்திற்கு முன் 13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண்: கொடுக்கப்பட்ட தண்டனை

அமெரிக்காவில் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன் பெண் ஆசிரியர் ஒருவர் 13 வயது மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில் அவருக்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் மோர்டன் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் Amy Nowaczyk.

26 வயதான இவர் பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவனுக்கு 2017-ஆம் ஆண்டிலிருந்தே பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி பள்ளி வகுப்பறையில் அவனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்த பொலிசார் இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது இவர் 13 வயது மாணவனுக்கு பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் எனவும், மின்னணு சாதனங்களை வைத்து மாணவனை டார்ச்சர் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதைத் தவிர நிர்வாண புகைப்படங்கள், தன்னுடைய ஆடையில் எப்போதும் முக்கிய பகுதிகள் தெரியும் அளவிற்கு இருக்கும் புகைப்படங்களையும் மாணவனுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் இவர் கடந்த ஜுன் மாதம் 6-ஆம் திகதி தான் தன்னுடைய காதலனான Jordan Shurtleffon(27) என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த இரண்டு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் Amy Nowaczyk கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் செய்தவதற்கு சில வாரங்களுக்கு முன்பும் இவர் மாணவனுடன் நெருக்கமாக இருந்துள்ளார் எனவும், தொடர்ந்து மாணவனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பதும் பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இவருக்கு 1 முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.