அல்லாவிடம் 21 முறை மன்னிப்புக் கோரியபின் வெடித்துச் சிதறிய இளம்பெண்.

ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறும் முன், 21 முறை “அல்லா என்னை மன்னித்துவிடு” என எழுதி வைத்துவிட்டு வெடித்துச் சிதறிய சம்பவம் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chechnyaவில் செக் போஸ்ட் ஒன்றின் அருகே, ஹிஜாப் அணிந்த ஒரு பெண், பொலிசாரின் எச்சரிக்கையையும் மீறி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

Karina Spiridonova (25) என்னும் அந்த பெண் கருப்பு நிற உடையும், தலையில் ஹிஜாபும் அணிந்து Grozny பகுதியில் ஆயுதம் ஏந்திய பொலிசாரை நோக்கி நடக்கிறார்.

அவரது சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் கண்ட பொலிசார் நின்று தனது அடையாள அட்டையைக் காட்டும்படி அவளிடம் கூறுகின்றனர்.

அந்த பெண்ணோ நிற்காமல், பொலிசாரை நோக்கி முன்னேறுவதைக் கண்ட பொலிசார் உஷாராகி, எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி சுடுகின்றனர்.

அதற்கு அஞ்சாத அந்த பெண் தன் உடலில் கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்கிறார். உடல் சிதறி அதே இடத்தில் அந்த பெண் உயிரிழக்க, பொலிசாருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

ஒரு காலத்தில் கவர்ச்சியாக உடையணிந்து, பார்ட்டிகளுக்கு செல்லும் பழக்கம் கொண்டவரும், வாலிபால் பிளேயருமான Karina, பின்னர், தீவிர மதப்பற்றுடையவரானார் என்று தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், அவர் ஐ.எஸ் அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்டவராக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.