பெற்ற மகளை 23 மாதங்கள் புழுக்கள் நிறைந்த காரின் உள்ளே மறைந்து வைத்த கொடூர தாய்: வெளியான அதிர்ச்சி காரணம்

பிரான்சில் காரின் உள்ளே குழந்தையை மறைந்து வைத்திருந்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போர்ச்சுக்கலை பிறப்பிடமாகக் கொண்ட Rosa Maria Da Cruz என்ற பெண் பிரான்சில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு Domingos Sampaio Alves என்ற கணவரும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு Rosa Maria Da Cruz-ன் காரை ஊழியர் ஒருவர் ரிப்பெயர் செய்ய வந்துள்ளார்.

அப்ப்போது அவர் காரின் உள்ளே ஒருவித நாத்தம் வருவதைக் கண்டு திறந்து பார்த்த போது, காரின் பின் பெட்டியில் புழுக்க நிறைந்த இடத்தில் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் ஒரு நீண்ட வழக்காக நடைபெற்று வந்துள்ளது.

அப்போது Rosa Maria Da Cruz-வுக்கு மீண்டும் கர்ப்பமாக இருப்பது பிடிக்கவில்லை என்றும், அதை மறைப்பதற்காக குழந்தை பிறந்தவுடன் அதை மறைத்துவைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சுமார் 23 மாதங்கள் இப்படி காரின் உள்ளே மறைந்து வைத்திருந்தால், செரினா(7) என்றழைக்கப்படும் அந்த குழந்தை தற்போது உணர்ச்சி இல்லாமல், உடை ஏதும் இல்லாமல், பலவீனத்தோடு, ஆட்டிஸத்துக்கான குணங்களோடு காணப்படுகிறார்.

இதனால் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக நேற்று இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதன் பின் 5 ஆண்டுகள் அவர் சமூகசேவைகளில் ஈடுபட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.