பாரவூர்தியுடன் மோதி நொறுங்கிய தனியார் பேருந்து!! ஒருவர் பலி, 25 பேர் வைத்தியசாலையில்

அலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் பாரவூர்தி மற்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் படுகாயமடைந்த நிலையில், கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை வரகாபொல மருத்துவமனையில் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.