கோர விபத்து. 26 வயது பெண் மற்றும் குழந்தை பலி.

இரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும் ஒரு குழந்தையும் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 26 வயதுடைய பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நிவித்திகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.