Trending News...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 மாணவர்கள் மரணம்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துயரச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

செல்வரட்ணம் திசான் (வயது-25), சரவணபவன் கோபிசன் (வயது-23) மற்றும் கோபாலகிருஷ்ணன் சாரங்கன் (வயது-25) ஆகிய மூவருமே உயிரிழந்தனர்.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.