4 வருடங்களாக தாய்மை அடையாத மனைவி. கணவன் செய்த கொடூரம்.

உத்திரபிரதேசத்தில் 4 வருடமாக கர்பமடையாத மனைவியை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியை சேர்ந்த நபர் 4 வருடமாக தாய்மை அடையாத தன்னுடைய மனைவியை 2-வது மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதனை பார்த்த பக்கத்து வீட்டார் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் குற்றவாளியை கைது செய்த பொலிஸார் வீட்டில் சோதனை செய்யும் போது, 4 கைதுப்பாக்கிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவற்றை கைப்பற்றிய பொலிஸார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், பல மாதங்களாக மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தது தெரியவந்தது.சம்பவம் நடைபெற்ற அன்று துப்பாக்கியை கொண்டு மிரட்டியுள்ளார். பின்னர் துப்பாக்கியின் பின் பகுதியை வைத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்து ஜன்னல் வழியாக வெளியில் தள்ளிவிட்டது தெரியவந்துள்ளது.