யாழில் போதை­யில் 5 வயது மக­னைக் கடித்து குத­றிய தந்தை!

கடி காயங்­க­ளுக்கு இலக்­கான 5 வய­துச் சிறு­வன் தெல்­லிப்­பழை வைத்தியசாலை­யில் சேர்க்கப்பட்டுள்ளான்.

போதை தலைக் கேறிய தந்­தையே சிறுவ­னைக் கடித்­துள்­ளார் என்று கூறப்­ப­டு­கின்­றது. சம்­ப­வம் தொடர்­பில் சிறு­வ­னின் தந்தை பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் இணு­வில் பகு­தி­யில் சம்ப­வம் இடம்­பெற்­றுள்­ளது. சிறு­வன் கை , முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்­க­ளுக்கு இலக்­கா­கி­யுள்­ளான்.

முறைப்­பாட் ­டைப் பதிவு செய்த சுன்னாகம் பொலி­ஸார் தந்­தை­யைக் கைது செய்­த­னர். விசா­ர­ணை­க­ளில் போதையே இதற்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

மேல­திக விச­ர­ணை­க­ளி்ன் பின்­னர் இன்று அவர் நீதி­வான் மன்­றில் முற்படுத்­தப்­ப­டு­வார் என்­றும் பொலிஸார் தெரி­வித்­த­னர்.

இதே­வேளை சிறு­வ­னின் உடல்­க­ளில் ஏற்­பட்ட காயங்­க­ளுக்கு சிகிச்சையளிக்கப்­ப­டு­கின்­றது என்­றும், தடுப்­பூசி ஏற்றப்­பட்­டுள்­ளது என்­றும் தெரிவிக்கப்பட்­டது.