இந்த 6 சாவில ஒன்ன சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!

பர்சனாலிட்டி டெஸ்ட் என்று இது போன்ற தேர்வுகளை பல இணையங்களில் கண்டிருக்கலாம். நமது தளத்திலேயே நாம் பல வகையான பர்சனாலிட்டி டெஸ்ட் கண்டுள்ளோம். அதில் கொஞ்சம் அறிவியல் ரீதியாகவும் ஏற்படுத்தப்பட்ட டெஸ்ட் தான் இது. இதன் முடிவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

இந்த தேர்வை டாக்டர் அபிகைல் ப்ரேனர் என்பவர் உளவியல் ரீதியாக உருவாக்கியுள்ளார். அதாவது ஒருவரது ஆழ்மனதில் எத்தகைய எண்ணங்கள் புதைந்திருந்தால், அவரது கற்பனை, எண்ணம், ஊக்கம், ஆழ்மன தரவுகள் எப்படியாக இருக்கும் என்பதை வைத்து இவர் இந்த தேர்வை உருவாக்கியுள்ளார்.

இங்கே நீங்கள் காணும் ஆறு சாவிகளும் ஒவ்வொரு தனித்தன்மை கொண்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொருள் இருக்கின்றன. இதன் மூலம் உங்கள் கனவுகள், உங்கள் நடவடிக்கை, செயல்கள், அதன் மூலம் உங்களுக்குள் ஏற்படும் தாக்கம் போன்றவற்றை அறிந்துக் கூற முடியும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.

முதல் சாவி
நீங்கள் தேர்வு செய்துள்ளது, மிக சாதாரணமான மற்றும் எந்த ஒரு அழகியலும் செய்யப்படாத சாவியாகும்.

இது எந்த ஒரு அலங்காரமும் இன்றி எளிமையாக இருந்தாலும் கூட, இது தான் கதவுகளை திறக்க உதவும் மிகவும் பயனுடைய சாவி ஆகும். இதன் மூலம், நீங்கள் பகுத்தறிவும், சரியாக தீர்மானம் செய்யும் நபராகவும், எதையும் ஆராய்ந்து செயற்படுபவராக இருப்பீர்கள். எனினும், சில நேரங்களில் நீங்கள் எளிதாக மனம் உடைந்து போகும் நிலைக் கொண்டிருப்பீர்கள். எளிதாக சில காரியங்கள் உங்களை வலிமையாக பாதிப்படைய செய்யும்.

இரண்டாவது சாவி
நீங்கள் ஒரு நம்பகத்தனம் கொண்டுள்ள சாவியை தேர்வு செய்துள்ளீர்கள். இது எந்த வகையிலான கதவுகளையும் திறக்கும் மாய சாவி.

இதன் மூலமாக நீங்கள் ஒரு வலிமையான, எவரையும் உங்கள் பக்கம் கவர்ந்திழுக்கும் நபராகவும், எதையும் புதுமையாக யோசித்து இயங்கும் நபராகவும் இருப்பீர்கள். நீங்கள் வேண்டுவதை எளிதாக பெற்றுவிடுவீர்கள். நீங்கள் சுதந்திரமாக செயற்படுவதும், ஒரு கூட்டுக்குள் அடைப்படாமல் இருப்பதுமே உங்கள் பலம்.


மூன்றாவது சாவி
நீங்கள் தேர்வு செய்திருப்பது ஒரு அரிய வகையிலான சாவி ஆகும்.

இதனால், உங்களுக்கு அதிக தன்னம்பிக்கை மற்றும் நீங்கள் உங்களை என்றும் நம்பும் நபராக இருப்பீர்கள் என்பது அறிய வருகிறது. மற்றபடி பார்த்தால், ஒரு வினோதமான சாவியை நீங்கள் தேர்வு செய்ததற்கான காரணம் என்ன? இந்த சாவியின் அமைப்பு மிகவும் சிரமமானது, தந்திரமானது. மேலும், இது எந்தவொரு கதவையும் திறக்கும் என்று தீர்க்கமாக கூறவும் இயலாது. எடுக்கும் முடிவில் தீர்க்கமாக இருக்கும் நபர் நீங்கள். உங்களிடம் சுவாரஸ்யமான ஐடியாக்கள் இருக்கும். சவால்களை துணிது ஏற்கும் குணம் கொண்டிருப்பீர்கள். எதற்கும் இரண்டாவது முறை சிந்திக்கலாம் என்ற எண்ணம் இருக்காது. உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் உங்களுக்காக காத்திருப்பவை.


நான்காவது சாவி
நீங்கள் தேர்வு செய்திருக்கும் இந்த சாவி நான்கு இல்லை கொண்ட குளோவர் (Clover) ஆகும்.

இதை நீங்கள் கவனித்தீர்களா? இதன் அர்த்தம் குதுகலம் / மகிழ்ச்சி. எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பண்பு, நல்லதையே காணும் தாராள நம்பிக்கை கொண்டிருத்தல். நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சில சமயம் தாராள நம்பிக்கை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும், கிளர்ச்சி உண்டாக செய்யும். இதனால் சிறிதளவு கவனச்சிதறல் உண்டாகவும் வாய்ப்புகள் உண்டு. இதனால் நீங்கள் என்ன ஏது என்று அறிந்துக் கொள்ளாமலேயே பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளலாம்.


ஐந்தாவது சாவி
நீங்கள் அழகியல் நிறைந்த மிகுந்த சிக்கல்கள் கொண்டுள்ள சாவியை தேர்வு செய்துள்ளீர்கள்.

இதில் ஃபேண்டசி, கதைகள் நிறைந்திருக்கும். இது கூறும் பொருள், நீங்கள் கற்பனை மற்றும் அதிகம் கனவுகள் கொண்டுள்ள நபராக இருக்கலாம். உங்களிடம் ஒரு சயமான தோற்றம் இருக்கும். அதில் போலியோ, மற்றவரை பிரதி எடுக்கும் தனமோ இருக்காது. உங்கள் கற்பனைகளில் தெளிவு இருக்கும். உங்களை சுற்றி நடப்பவற்றை மிகவும் பர்சனலாக எடுத்துக் கொள்வீர்கள். சில நேரங்களில் உங்கள் சுய தனித்துவ பாத்திரம் சரியாத புரிந்துக் கொள்ளப்பட மாட்டாது. இதனால், நீங்கள் ஒருவரை, ஒரு செயலை, உங்கள் செயலின் எதிர்வினையை தவறாக உணர வாய்ப்புகள் உண்டு.


ஆறாவது சாவி
நீங்கள் ஒரு கிளாஸிக் சாவியை தேர்வு செய்துள்ளீர்கள்..


இதன் மூலம் நீங்கள் பகுத்தறிவும், நல்ல சிந்தனைகளும் கொண்டுள்ள நபர் என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது. உங்களிடம் சிறந்த கவன கூர்மை இருக்கும். ஆனால், நீங்கள் உங்கள் கம்ஃபர்ட் இடத்தை விட்டு ஒரு அடியும் வெளியே எடுத்து வைக்காமல் இருப்பதால், இதை முழுவதும் அறிந்துக் கொள்ள முடியாமல் போகலாம். நீங்கள் மிகவும் நேர்மையாக நடந்துக் கொள்வீர்கள், இதையே உங்களை சுற்றி இருக்கும் மக்களிடமும் எதிர்பார்ப்பீர்கள். இது சில சமயம் நடக்கும், சில சமயம் எதிர்பார்த்த அளவு நடக்காது.