யாழில் 7 வயது சிறுமியை சீரழித்தவனுக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை.

கொடிகாமம் பகுதியில், பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து 7 வயது சிறுமியைக் கடத்தி சென்று வன்புனர்வுக்கு உட்படுத்திய நபருக்கு, 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர்  தீர்ப்பளித்தார்.

2011ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி இரவு, வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த நபர், பெற்றோர், சகோதரர்களுடன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியைக் கடத்திச் சென்று, வன்புணர்ந்துள்ளார்.

இதையடுத்து, குறித்த நபர், சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.