9 வயது சிறுமிக்கு 50 ரூபா கொடுத்து கிழடு ஒருவருடமாக செய்துவந்த காரியம்.

பாடசாலை விட்டு வீட்டுக்கு சென்ற 9 வயது சிறுமியை ஏமாற்றி பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 69 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 45 வருடங்களுக்கு கடுமையான வேலைகளுடன் கூடிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

துஸ்பிரயோகத்திற்குள்ளான சிறுமிக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இழப்பீடு செலுத்துமாறு ஹம்பாந்தோட்டை உயர்நீதிமன்ற நீதிபதி அஜித் எம். மாசிங்க உத்தரவிட்டுள்ளார்.

லுணுகம்வெஹேர- படவ்கம –புஞ்சிஅப்புஜதுற பிரதேசத்தைச் சேர்ந்த அதொறு கலப்பதிகே சிறிபால என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது

கடந்த 2004ம் ஆண்டு ஒக்டோபர் 11ம் திகதி தொடக்கம் அவ்வப்போது டொபி வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி சிறுமியை பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 9 வயது சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி லுணுகம்வெஹேர பாடசலையில் 4ம் தரத்தில் கல்வி பயின்ற வேளை பாடசாலை விட்டு வீட்டுக்குச் செல்லும்வேளை மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் சிறுமியை வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு துஸ்பியோகம் செய்துள்ளார்.

அதன் பின்னர் சிறுமியிடம் 50 ரூபாய் கொடுத்து இது பற்றி யாரிடமும் கூறினால் தானும் நஞ்சு அருந்தி சிறுமிக்கும் நஞ்சு ஊட்டுவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இந்த சந்தேக நபர் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுமிக்கு பணம் கொடுத்து துஸ்பிரயோகம் செய்துள்ளார்

சிறுமியின் வகுப்பு ஆசிரியர் சிறுமி பாடசலை நேரத்தில் டொபி, சொக்லேட் அதிகமாகச் சாப்பிடுவதை அவதானித்து பாடசலை அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

பாடசலை அதிபர் சிறுமியை அழைத்து அவ்வாறு டொபி, சொக்லேட் சாப்பிட எவ்வாறு பணம் கிடைக்கின்றது என்பதை விசாரித்துள்ளார்.

அதன்படி சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் அம்மம்மா பாடசலைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸ் நிலையத்திற்குச் செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமியின் தாய் குடும்பத்தை கை விட்டு சென்ற நிலையில் சிறுமி அம்மம்மாவின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.

அவர்கள் பொலிஸாரிடம் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபருக்கு எதிராக 13 வருடங்களாக இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குற்றவாளியாக காணப்பட்ட குறித்த நபருக்கு மேற்குறித்த தண்டனை வழங்கப்பட்டது.

சந்தேக நபரின் வயதை கருத்தில் கொண்டு, உயர்நீதிமன்ற நீதிபதி, மூன்று குற்றச்சாட்டுகளில் சுமத்த 45 ஆண்டுகள் சிறை தண்டனையை 15 ஆண்டுகளுக்குள் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.