நாடாளுமன்றுக்குள் அதிரடியாக களமிறக்கப்பட்ட பொலிஸ் படையினர்!

இலங்கை நாடாளுமன்றுக்குள் தற்போது பொலிஸ் படை அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளது.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றுக்குள் செங்கோளுடன் சபாநாயகர் வருகைத்தந்துள்ளார்.

எனினும் மஹிந்த அணியினர் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சபாநாயகரின் ஆசனத்தையும் வீசியுள்ளனர்.

இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டு சபாநாயகர் வெளியில் சென்று விட்டார். சபாநாயகரை பொலிஸ் படையினர் பாதுகாப்பாக வெளியில் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது பொலிஸாருக்கும், மஹிந்த அணியினருக்கும் இடையில் ஒரு யுத்தமே நடைபெற்றதைப் போன்று இன்றைய நடாளுமன்றம் காணப்பட்டது.