கணவனின் அண்ணனுடன் தவறான தொடர்பு: நள்ளிரவில் தலையில் அம்மிக்கல்லை போட்ட கணவரின் வெறிச்செயல்

மதுரை மாவட்டத்தில் தனது அண்ணனுடன் தவறான தொடர்பு வைத்திருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்துள்ளார்.

முருகன் - பஞ்சவர்ணம் தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகள் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மகன் பெற்றோருடன் வசித்தார்.

முருகனின் சகோதரருடன் பஞ்சவர்ணம் தவறான தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால் இவர்கள் இருவரும் முருகன் சொல்வதை கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு அண்ணன் முருகன் கத்தியால் குத்தியதாக பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் , இவர்களது தவறான தொடர்பு தொடர்ந்த காரணத்தால், நேற்று இரவு தம்பதியினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இரவு வீட்டில் தூங்கி விட்டனர்.

நள்ளிரவில் கண்விழித்த முருகன் திடீரென்று அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த பஞ்சவர்ணத்தின் தலையில் போட்டு கொலை செய்தார்.

ரத்தவெள்ளத்தில் பஞ்சவர்ணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன்பின்பு முருகன் நேராக அண்ணாநகர் பொலிஸ் நிலையம் சென்று, அங்கு தனது மனைவியை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார்.

பின்னர் பொலிசார் முருகனை கைது செய்தனர்.