தண்டவாளத்தில் இளைஞன் தலையை வைத்து தற்கொலை.

றம்புக்கன தொடக்கம் கோட்டை நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதுடன் 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

தொடரூந்து கடவை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர், வெயங்கொட தொடரூந்து வீதி குறுக்காக பயணிக்க முற்பட்ட போது இவ்வாறு மோதுண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தண்டவாளத்தில் இளைஞன் தலையை வைத்து தற்கொலை செய்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விபத்து குறித்து வெயங்கொட பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.