யாழில் இன்றும், நாளையும் மின்தடை..!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமையும்(20),நாளை புதன்கிழமையும்(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை(20)காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். குளப்பிட்டியிலிருந்து ஆனைக் கோட்டை வரை, மூத்த விநாயகர் கோயில் பிரதேசம், நவாலி, நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம், வேலக்கைப் பிள்ளையார் கோயிலடி, அட்டகிரி ஆகிய பகுதிகளிலும், நாளை புதன்கிழமை(21) காலை- 08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ். மல்லாகம் கல்லாரைப் பகுதியிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.