பாவனைக்கு உதவாத உப்பு விற்றவருக்கு நடந்த விபரீதம்.

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக உப்பினை விற்பனை செய்த குற்றத்திற்காக வியாபாரி ஒருவருக்கு களுவாஞ்சிகுடி நீதவானால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அயடின் கலத்தல் ஒழுங்கு விதிச்சட்டத்திற்கு முரணான உப்பினை விற்பனை செய்த குற்றத்திற்காகவே குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் உப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரியின் உப்பை பொதுச் சுகாதார பரிசோதகர் சோதனைக்கு உட்படுத்தியபோதே குறித்த உப்பானது அயடின் கலத்தல் ஒழுங்கு வித்திச்சட்டத்திற்கு முரணான உப்பு எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்படி குற்றத்திற்கு அமையக் குறித்த வியாபாரியை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதி மன்றில் ஆஜர்படுத்திய வேளையில் குறித்த அபராதம் நீதவானால் விதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்..