மஹிந்த தரப்பினர் மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய் தூள் கரைசலை வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்தூள் கரைசல் வீசப்பட்ட புகைப்படங்களையும் திலகராஜா முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜே.வி.பி.யின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் ஆகியோர் மீது இந்த மிளகாய் தூள் சரைசல் வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.