Trending News...

கடைகளில் பொம்மைகளை திருடி இணையத்தில் விற்ற கில்லாடி பாட்டி!

பரிசில் 72 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 700 திருட்டு வழக்குகளில் தொடர்புபட்டுள்ளார்.

குறித்த 72 வயதுடைய பெண், பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் பொம்மைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் உரிமையாளர். அவர் கடந்த ஒக்டோபரில் e.sale எனும் இணையத்தின் ஊடாக பொம்மைகளை விற்றுள்ளார். இதில் விற்பனை செய்யப்பட்ட 17 பொம்மைகள் வேறு கடைகளில் திருடப்பட்ட பொம்மைகள் என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் குறித்த பெண்மணியை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தினர்.

குறித்த பெண்மணி, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இணையத்தளத்தில் 957 விளம்பரங்கள் பகிர்ந்துள்ளார். அதில் உள்ள அனைத்து பொம்மைகளும் திருடப்பட்ட பொம்மைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆறு கடைகளில் 700 பொம்மைகள் திருடியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரது வீட்டில் சோதனையிட்டபோது, அங்கு 1,000  பொம்மைகளும் €40,000 ரொக்கப்பணமும் மீட்கப்ப்பட்டிருந்தது.